விவாஹப் பொருத்தத்தின் முக்கிய அம்சங்கள் 

பெற்றோர்களின் பொறுப்பு.

திருமணத்திற்குரிய காலகட்டம் வந்ததும், அவரவர்களின் பெண்ணிற்கோ அல்லது பிள்ளைக்கோ திருமணம் செய்துவைப்பது பெற்றோர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஆகையால் தங்கள் மகள் அல்லது மகனுக்கு உரிய வரனைத்தேடி திருமணம் செய்ய முனைகின்றனர். தகுந்த வரன் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஒரு ஜோசியரை அணுகி சரியான பொருத்தம் அமைந்தால் திருமணம் நடப்பதற்கு வேண்டிய அடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது அனைரும் அறிந்ததே. தகுந்த வரனை தேடி எடுப்பது எப்படி? பொருத்தம் எவ்வாறு பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொள்வோமா ?

தகுந்த வரன் தேடுவதில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை.
1. ஜாதி,மதம்,குலம்,கோத்திரம்,உட்பிரிவு,
2. வரன் இருக்கும் ஊர், பூர்வீகம், குடும்ப அந்தஸ்து
3. வயது வித்தியாசம்
4. பெண் அல்லது பையனின் படிப்புக்கு தகுந்தபடி ஜாதகம் எடுப்பது.
5. அரசாங்க வேலையா, தனியார் கம்பெனியா, நிரந்தர வேலையா ?
6. சொந்த பிஸிநெஸ் அல்லது வியாபாரமா ?
7. போதிய வருமானமும், வசதியும் இருக்கிறதா ?
8. வரனின் குணாதிசயங்களை விசாரிப்பது
9. தனது மகள் அல்லது மகனுக்கு ஏற்ற வரனா ?
10.உயரம், நிறம், அழகு. உடல் வாகு ஒத்துவருமா ?
11.நோய், நொடி ஊனம், இல்லாத வரனா ?
12.பெண் அல்லது பையனின் பிறந்த நக்ஷத்திரத்துக்கு பொருந்தக்கூடிய ஜாதகங்களை எடுப்பது.


இந்த 12 விஷயங்களையும் ஆராய்ந்து வரன்களின் ஜாதகங்கள் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஓர் நல்ல ஜோதிடரை அணுகுவது நமது பழக்கத்தில் உள்ளது.

இப்போது திருமணப் பொருத்தம் பார்ப்பதின் விபரங்களைப் பார்ப்போமா ?
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ?

திருமணப்பொருத்தம் பார்ப்பது என்றால் அநேக பொருத்தங்களைப் பலவிதமாக பார்க்கலாம்.
உதாரணமாக கீழ்கண்ட பொருத்தங்களைப் ஒரு ஜோதிடரிடம் சென்று பார்க்கலாம்.
1. ஆண்,பெண் ஜாதகங்களின் சுப, பாவ, சம நிலை ?
2. நக்ஷத்திரப் பொருத்தம்.
3. செவ்வாய் தோஷப் பொருத்தம்
4. நாக தோஷம் / காலசா;ப்ப nhதஷம்
5. லக்னப் பொருத்தம்/ லக்னாதிபதிப் பொருத்தம்;
6. ராசிப் பொருத்தம் / ராசியாதிபதிப் பொருத்தம்
7. ஆயுள் பொருத்தம் / நாடிப் பொருத்தம்
8. புத்திரபாவப் பொருத்தம்
9. கூட்டு கிரகப் பொருத்தம்
10. களத்திர தோஷம்/ ஷஷ்டாஷ்டகம் /  பஞ்சநவமம்
11. உறவுப் பொருத்தம் /  விதிவழிப் பொருத்தம்
12. தசா சந்திப்பு
இவ்வாறு பலவித பொருத்தங்களை தனித்தனியாகப் பார்க்கலாம்.


திருமணப் பொருத்தத்தை கீழ்கண்ட முறையிலும் பார்க்கலாம்.
1. நக்ஷத்திரப் பொருத்தம்
2. செவ்வாய் தோஷம்
3. தசா சந்திப்பு
4. பாவ சாம்யம் (தோஷ சாம்யம்)

இந்த 4 வகை பொருத்தங்களும் கட்டாயம் பார்க்கவேண்டும். இவை திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே விவாகம் செய்யலாம். இந்த 4ல் ஏதாவது ஒன்று சரியாக பொருந்தாது போனால் திருமணம் செய்யக் கூடாது, மேலும் இந்த முறையில் துல்லியமாகவும், சீக்கிரமாகவும், குறைந்த செலவிலும் முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.

திருமணப்பொருத்தம் பார்ப்பதில் உள்ள விபரங்கள் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.
ஆகையால் நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷம், தசாசந்திப்பு, பாவசாம்யம் (தோஷசாம்யம்), நாகதோஷம் /  காலசர்ப்ப தோஷம் இவைகளைப்பற்றி விவாஹசங்கமம் இணையதயத்தில் தமிழில் வெளியிட்டுள்ளோம்.

அனைவரும் படித்து பயன் பெற அழைக்கின்றோம்.

வணக்கம்
தங்கள் அன்புள்ள
புதுக்கோட்டை கல்யாணராமன்