விவாஹசங்கமம்,சென்னை,இந்தியா
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?
 
ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராம்                                   15th March 2009
பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத நக்ஷத்திரங்களாக கருதுகிறோம்.

1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம்.
2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம்.
3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம்.
4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது.
5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே.

இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன
சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில்

1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை.

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள். ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது.
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா?
ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
 

1. ஆயில்ய நக்ஷத்திரம்

ஆயில்யம் கடக ராசியில் உள்ளது. கடகம் சந்திரனின் ஆட்சி வீடு. சந்திரன் தாய்க்கு காரகர். மாமியார் மணமகனின் தாய். ஆகவே தாயின் காரகரால் தாயாருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாயின் காரகர் தன் தாயாரைக் கொல்ல மாட்டார்.
ஆயில்யத்தின் அதிபதி புதன். ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 10ம் வீடு மாமியார் வீடு. இந்த வீட்டில் புதபகவான் செவ்வாய் அல்லது ராகு கேதுவுடன் சேர்ந்து நின்றாலோ, அல்லது 4 ம் வீட்டில் இவ்வாறு காணப் பட்டாலோ மாமியாருக்கு கெடுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் புதன் ஆட்சி, உச்சம் பெற்று சுக்கிரனின் சாரம் பெற்று இருந்தால் மாமியாருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

ஆயில்ய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை உங்கள் ஜோதிடரிடம் ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

 

2. மூலம் நக்ஷத்திரம்.

ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர் மூலம் என்பது ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று மாறுபட்டதால், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களின் வரன்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறோம். இதன் உண்மை பின்வருமாறு.

ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும், சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகங்களும் ஏற்படுகின்றன.
இதையே ஆனி மூலம் அரசாளும் என்று சொல்கிறோம். (ஆனி மூலம் என்பது ஆண்மூலம் ஆகியது)

மூலம் நக்ஷத்திரத்தின் 4 வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் சமாளித்து தனது  எதிரிகளையும் நிர்மூலம் செய்து வெல்லக்கூடிய திறமை உள்ளவர்கள். இதுவே பின்மூலம் நிர்மூலம் எனப்படும். எனவே (பின் மூலம் என்பது பெண் மூலம் ஆகியது)

சரி, ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானே மேற்படி விளக்கம், மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் யாருக்காவது ஆபத்து வருமா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.
மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு ஆபத்து என்பது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது.
லக்னத்துக்கு 3 ம் வீடு மாமனார் வீடு. இங்கு கேது இருந்தாலோ மற்றும் 4 வது 9 வது வீடுகளில் கேது காணப்பட்டாலோ மாமனாருக்கு கெடுதல் நேரலாம். மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தால் மட்டும் எநத வித தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பரிகாரம்- கேதுவின் நக்ஷத்திரம் மூலம். திருமணமாகாத பெண்களும், ஆண்களும் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகரையும், திருப்பதி அருகெ காளஹஸ்த்தியில் இருக்கும் பாதாள விநாயகரையும், மயிலாடுதுறை அருகேயுள்ள கேதுவின் ஸ்தலமாகிய கீழ்பெரும்பள்ளத்திற்கும் சென்று பரிகாரம் செய்துவருவது நன்மை தரும்.

மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை
உங்கள் ஜோதிடர் மூலமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

 

கேட்டை நக்ஷத்திரம்

கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ராசி சக்கரத்தில் 5ம் இடத்தில் பாபிகள் இருந்தால் மூத்த மைத்துனருக்கு கெடுதல் ஏற்படலாம். கேட்டையின் அதிபதி புதன். இவருடன் 5ம் வீட்டில், ராகு,கேது,குரு,செவ்வாய், தொடர்பு காணப்பட்டால், மூத்தமைத்துனருக்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம். மற்றபடி எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை.

ஆகையால் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறநத பெண்களின் ஜாதகங்களை உடனடியாக ஒதுக்காமல், மேற்கண்டவாறு தோஷம் உள்ளதா? மூத்தமைத்துனருக்கு துன்பம் வருமா? என உங்கள் ஜோதிடரை அணுகி முடிவு செய்யவும். சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

 

விசாகம் நக்ஷத்திரம்.

 

விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப் படுகிறது. ராசி சக்கரத்தில் 9ம் இடத்தைப் பார்த்து இளைய மைத்துனருக்கு இன்னல் வருமா என்று தெரிந்து கொள்ளலாம். 9ம் வீட்டில் ராகு,கேது,செவ்வாய் நின்றால் இளைய மைத்துனருக்கு ஆயுள் குறைவை ஏற்படுத்தலாம்.
விசாகத்தின் அதிபதி குருபகவான். குருவுடன், புதன் சேர்ந்து காணப்பட்டாலோ அல்லது குரு கெட்டு இருந்தாலோ இளைய மைத்துனருக்கு சில இன்னல்கள் ஏற்படலாம். ஆனால் குருபகவான் வலுவாக இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

உங்களிடம் வரும் விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்த வரனின் ஜாதகத்தில் இவ்வாறு உள்ளதா என்று ஜாதகத்தை ஓர் நல்ல ஜோதிடர்டம்  பரிசீலித்து முடிவு செய்யுங்கள். விசாகம் என்ற உடனே ஒதுக்காதீர்கள். சுத்த ஜாதகங்களானால் பாதிப்பு இருக்காது.

 

பூராடம் நக்ஷத்திரம்
  ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் நக்ஷ்ததிரங்களுக்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் போல் பூராடம் நூலாடாது என்பதற்கு ஜோதிடத்தில் ஆதாரம் எதுவும் தென்படவில்லை. ஆகையால் பூராடம் நூலாடாது என்பது பழக்கத்தில் ஏற்பட்டதாக கொள்ளலாம். பூராடம் நூலாடாது என்றால் தாலி நிலைக்குமா என்று பயப்படுகிறோம். ஆனால் பூராடம் நூலாடாது என்றால் திருமாங்கல்யம் ஆடிப்போகாமல் நிலைத்து நிற்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆண் பெண் இருவருக்கும் ஆயுள் பாவம் பலமாக இருந்தால் எந்தவித பாதிப்பு வர வாய்ப்பு இல்லை.

பூராடம் நக்ஷத்திரஙகளின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவருடைய ஆயுள் பாவங்கள் நன்றாக இருக்கின்றனவா என உங்கள் ஜோதிடர் மூலம் தெரிந்துகொண்டு முடிவு செய்யவும்.

 
 

இந்த கட்டுரை சில ஜோதிட நூல்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டது. இதன் நோக்கம் ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம், பூராடம் நக்ஷத்திரத்தில் பிறநத ஆண் பெண்களின் ஜாதகங்களை உடனடியாக ஒதுக்காமல், ஓர் நல்ல ஜோதிடரிடம் காண்பித்து முடிவு செய்யலாம் என்பதே.
தோஷமுள்ள ஜாதகர்கள் பரிகாரம் செயது கொள்வது நலம். சுத்தமான ஜாதகங்களானாலும் எப்போதும் போல திருமணப்பொருத்தம் பார்த்த பிறகுதான் சேர்க்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு உங்கள் ஜோசியரை அணுகவும்
வணக்கம்
புதுக்கோட்டை கல்யாணராமன்
ஸ்தாபகர்---விவாஹசங்கமம்.
சென்னை---இந்தியா

15-03-2009